ஈழத்தை வென்றெடுக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள்! அசேல தர்மசிறி ஆதங்கம்-செய்திகளின் தொகுப்பு
போர் மூலம் பெற்றுக்கொள்ள முடியாத ஈழத்தை, இலங்கையை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளி அதனூடாக வென்றெடுக்க புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து வருவதாக ஐக்கிய போர் வீரர்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார்.
போராட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ள அவர்கள் தொடர்ந்தும் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் 30 ஆண்டு யுத்தத்திற்காக உயிர் தியாகம் செய்த படையினரை நினைவுகூரும் தினத்தில், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்புக்காக கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவரும், தமிழ் இளைஞர்கள் சிலரும் காலிமுகத்திடலில் நினைவு நிகழ்வு ஒன்றை நடத்தினர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அசேல தர்மசிறி இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,