சஜித் தரப்பினருக்கு எதிராக நீதிமன்றம் சென்றார் டயானா!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையிலிருந்து விலக்கப்பட்டமைக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே (Diana Gamage), உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் தனக்கு எதிராக எட்டப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு, அவர் அந்த மனுவின் ஊடாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயனா கமகே, 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இதனையடுத்து கட்சி உறுப்புரிமையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழு கூடி டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்திருந்தது.
இந்நிலையில், தற்போது, கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக டயானா கமகே, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.....
டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கம்! - சஜித் அணி அதிரடி நடவடிக்கை
