மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக்குறைவாக பேசிய டயானா கமகே! பதிலடி கொடுத்த சாள்ஸ் நிர்மலநாதன்

Mannar Sri Lanka Parliament Sri Lanka Charles Nirmalanathan Diana Gamage
By Ashik Sep 14, 2022 08:30 PM GMT
Report

மன்னார் மாவட்டத்திற்கென தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு.எனினும் மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக்குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்பு எவ்வித அருகதையும் இல்லை எனவும், அவரது கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை(14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பாக கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தை ஊடகங்கள் ஊடாக தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக்குறைவாக பேசிய டயானா கமகே! பதிலடி கொடுத்த சாள்ஸ் நிர்மலநாதன் | Diana Gamage Speaks About Mannar Distric

டயானா கமகேவின் கண்டனத்திற்குரிய கருத்து

மன்னார் மாவட்டத்தை ஓர் களியாட்ட இடமாகவும்,குறிப்பாக தன்னை சிறு வயதில் கருவாடு காய வைப்பதற்கு மன்னாரிற்கு அனுப்ப உள்ளதாக தன்னை பயமுறுத்தி வளர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.அவரது கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக்குறைவாக பேசிய டயானா கமகே! பதிலடி கொடுத்த சாள்ஸ் நிர்மலநாதன் | Diana Gamage Speaks About Mannar Distric

மன்னார் மாவட்டம் மிகவும் கலை,கலாச்சார பண்புகள்,கடல் வளம்,விவசாய வளம் அனைத்தோடு பொருந்தியதாக அமைந்துள்ளது. தற்போது கல்வியில் தலை சிறந்து விளங்கி காணப்படுகின்றது.

தற்போதைய உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த காலங்களை விட இம்முறை உயர்ந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம்,மடு திருத்தலம் ஆகிய இரு பழமை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன.

சர்ச்சைக்குரிய கருத்து

எனவே மன்னார் மாவட்டத்தின் கலை,கலாச்சார பண்புகள் தெரியாமல்,இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்கள் முன் கதைப்பது கண்டிக்கத்தக்க விடயம் என்பதோடு,இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கிய ஜனாதிபதி அதனை பரிசீலிக்க வேண்டும்.

குறித்த பெண் சில காலங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் கருத்தை முன்வைத்தார். நாட்டில் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.கொழும்பை இரவு நேர களியாட்ட வலயமாக மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார்.

அவருடைய செயற்பாடுகள் தொடர்ச்சியாக இவ்வாறு இருக்கும் போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கியமை குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US