டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான வழக்கு-சி.ஐ.டிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை சம்பந்தமான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து தேவையான அறிக்கைகளை துரிதமாக வரவழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கை கிடைக்கும் வரை டயனாவை கைது செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியாது
டயனா கமகேவின் பிரித்தானிய குடியுரிமை தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
டயனா கமகேவின் பிறப்பத்தாட்சி பத்திரம், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பன போலியானவை எனவும் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் கோரி சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து கிடைத்த பின்னர், வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்குவது நீதிமன்றத்திற்கு இலகுவாக இருக்கும் என கூறியுள்ள நீதவான், அதுவரை டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடுவது பொருத்தமற்றது எனவும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri
