தனது பதவிக்கு உட்பட்ட அதிகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டயானா கமகே
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது பதவிக்கு உட்பட்ட எந்தவொரு அதிகாரமும் தனக்கு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (07.10.2022) உரையாற்றும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தனக்கு அறிவிக்காமல் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலிட அழுத்தம்
சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க, மேலிட அழுத்தம் காரணமாக, கடந்த 6ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பெண் ஏன் தலைமைப் பதவியில் இருக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை சுற்றுலாதுறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தை நீக்கியமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவும்
கோரிக்கை முன்வைத்துள்ளார்.