திக்வெல்ல - ஹசரங்கவை கடுமையாக எச்சரித்த உப்புல் தரங்க
கிரிக்கெட் அரங்கில் எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மனதில் கொள்ளுமாறு நிரோஷன் திக்வெல்லவுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்க அறிவுறுத்தியுள்ளார்.
உப்புல் தரங்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் கிரிக்கெட் தலைமையகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஊடக சந்திப்பில் நிரோஷன் திக்வெல்லவின் ஒழுக்கம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உப்புல் தரங்க,
கடுமையாக அறிவுறுத்தல்
'கிரிக்கெட் அரங்கில் எவ்வளவுதான் பிரகாசித்தாலும் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுவது அவசியம் என திக்வெல்லவுக்கு நாங்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளோம்.

இது வனிந்து ஹசரங்கவுக்கும் பொருந்தும். வனிந்து ஹசரங்க இரண்டு போட்டித் தடையுடன் தப்பித்துக்கொண்டது பெரிய விடயம்.
எனவே வருங்காலத்தில் ஹசரங்க பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.
இதேவேளை, குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே நிரோஷன் திக்வெல்லவை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக அவர் கூறினார்.
'நிரோஷன் திக்வெல்ல ஒரு பதில் வீரர் மாத்திரமே. குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டோம். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.
அணிக்குள் ஈர்க்கப்படுவது உறுதி
பெத்தும் நிஸ்ஸங்க உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அவிஷ்க பெர்னாண்டோவை ஆரம்ப விரராக இணைத்துள்ளோம்.
இளம் வீரர்களான லசித் குரூஸ்புள்ளே, ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் எதிர்கால நட்சத்திரங்களாக வரக்கூடியவர்கள் என்ற கருத்து பரவலாக இருந்ததை சகலரும் அறிவர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அண்மைக்காலமாக அவர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவருகின்றனர்.
அவர்கள் இருவரும் தங்களது குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு தொடர்ச்சியாக பிரகாசித்தால் அணிக்குள் ஈர்க்கப்படுவது உறுதி.
'அவர்கள் இருவரில் ஒருவரையா, நிரோஷன் திக்வெல்லவையா குசல் பெரேராவுக்கு பதிலாக உள்வாங்குவது என நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம்.
ஆனால், அணித் தலைவர், பயிற்றுநர் ஆகிய இருவரும் நிரோஷன் திக்வெல்லவுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என விரும்பினர்.
தெரிவுக்குழுவினர் மாத்திரம் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட முடியாது. அணித் தலைவர், பயிற்றுநர் ஆகியோரது கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்' என உப்புல் தரங்க குறிபிட்டார்.
மேலும், தினேஷ் சந்திமாலை தாங்கள் ஒதுக்கவில்லை எனவும் அவர் கூறினார். சந்தர்ப்பம் வரும்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan