ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் 21ஆம் திகதி தீர்மானம் - தயாசிறி
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆறு யோசனைகள் ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவது, அரசாங்கத்துடன் இணைந்து ஒன்றாக பயணிப்பது, எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது உள்ளிட்ட சில முக்கிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam