600 மீற்றர் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்த தருஷி
ஸ்பெய்னில் இன்று நடைபெற்ற 19ஆவது பில்பாஓ ரீயூனியன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி போட்டியிட்ட தருஷி கருணாராத்ன 600 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சாதனையை படைத்துள்ளார்.
குறித்த போட்டியை ஒரு நிமிடம் 24.84 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆம் இடத்தை பிடித்ததோடு இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும், 600 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்குகொண்ட காலிங்க குமாரகே 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
600 மீற்றர் ஓட்டப் போட்டி
ஜப்பானின் அயானோ ஷோமி 2022இல் நிலைநாட்டிய (ஒரு நிமிடம் 24.84 செக்.) சாதனையையே தருஷி இன்று முறியடித்துள்ளார்.
பொதுவாக 600 மீற்றர் ஓட்டப் போட்டி ஒலிம்பிக்கில் உள்ளடக்கப்படாவிட்டாலும், இது போன்ற சிறப்பு மெய்வல்லுனர் போட்டிகளில் இந்த நிகழ்ச்சி உள்ளடக்கப்படுவது வழக்கமாகும்.
சர்வதேச மெய்வல்லுனர் போட்டி ஒன்றில் 600 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தருஷி கருணாரட்ன பங்குபற்றியது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல, இந்த நிகழ்ச்சியில் இலங்கை வீராங்கனையொருவர் பதிவு செய்த அதிசிறந்த நேரப் பெறுமதியாகவும், சர்வதேச ரீதியில் குறித்த போட்டி நிகழ்ச்சியில் வீராங்கனையொருவரால் பதிவு செய்யப்பட்ட 3ஆவது அதிசிறந்த நேரப் பெறுமதியாகவும் இது இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |