பொசன் பூரணை நாளை முன்னிட்டு 22 இடங்களில் வவுனியாவில் தன்சல் வழங்கி வைப்பு
பொசன் பூரணை நாளை முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தன்சல் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அத்துடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
பௌத்த மக்களின் விசேட தினமான பொசன் பூரணை நாளை முன்னிட்டு வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம், வனவளத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு, தொலைத் தொடர்பு திணைக்களம் உள்ளிட்ட 22 இடங்களில் தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.
தன்சல் வழங்கி வைப்பு
இதன்போது குளிர்பானம், ஐஸ்கிறீம், கடலை, பாணும் சம்பலும், புரியாணி, சோறு கறி என பல்வேறு உணவுப் பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
விசேட நிகழ்வாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் 3000 பேருக்கு புரியாணி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயமுனி சோமரட்ண, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக் கொடி, பொலிஸ் அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதனைப் பெற்றுக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
