தம்மிக்க நிரோஷன கொலை வழக்கு : ஒருவர் கைது
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தம்மிக்க நிரோஷனவின் கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alies) தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு
இதன்போது நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தம்மிக்க நிரோஷன கடந்த செவ்வாய்க்கிழமை (16) அம்பலாங்கொடை கந்த பகுதியில் அவரது வீட்டிற்கு முன்பாக 3பேர் அடங்கிய குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
