பௌத்த அறநெறி பாடசாலைக்குள் மாணவியை சரமாரியாக வெட்டிய நபர்! வெளியான காரணம்
கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் நடத்தப்படும் தஹம் பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
விகாரையில் தஹம் பாடசாலை இடம்பெறும் வளாகத்தினுள் இன்று (02.04.20223) காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம்
சம்பவம் தொடர்பில் கல்ஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவி தற்போது கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் காதல் உறவு கொள்ள மறுத்ததால் இவ்வாறு வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
