தெவிநுவர துப்பாக்கிச் சூடு : தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் கைது
கடந்த 21 ஆம் திகதி கந்தர பொலிஸ் பிரிவின் தெவிநுவரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் புத்தளம் வென்னப்புவை பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை - தெவிநுவர - தியூந்தர சிங்காசன வீதியில் கடந்த (21) ஆம் திகதி இரவு 11.45 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது, தெவிநுவர பகுதியைச் சேர்ந்த பசிந்து தாரக, 29, மற்றும் யோமேஷ் நதீஷன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையிலேயே, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் வென்னப்புவை பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
