இறால் பண்ணை அமைக்கும் செயற்பாடுகள் உண்மையில் அபிவிருத்தி இல்லை : தவத்திரு வேலன்சுவாமி
அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இறால் பண்ணை அமைக்கும் செயற்பாடுகள் உண்மையில் அபிவிருத்தியில்லை என்பதுடன், அது முதலாளிகளை மேலும் முதலாளிகள் ஆக்கும் செயல் என சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் தவத் திரு வேலன் சுவாமி உள்ளிட்டோர் வாகரை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டள்ளனர்.
இதன்போது வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணை அமைப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச மக்கள் தமது முறைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.
வாகரையில் தட்டுமுனை தொடக்கம் கட்டுமுறிவு வரைக்குமான சுமார் 3800 ஏக்கர் நிலம் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு நாடுகள் என்ற கருத்தியலை நோக்கி மக்கள் நகரும் சூழலில் திட்டமிட்ட வகையில் தமிழனத்தை அழிக்கும் வகையிலேயே, இறால் பண்ணை அமைக்கும் விடயங்கள் அமைந்துள்ளதாக இதன்போது சிவகுரு ஆதின முதல்வருமான தவத்திரு வேலன்சுவாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இறால் பண்ணை அமைக்கும் செயற்பாடுகள் உண்மையில் அபிவிருத்தியில்லை என்பதுடன், அது முதலாளிகளை மேலும் முதலாளிகள் ஆக்கும் செயல் என சிவகுரு ஆதின முதல்வருமான தவத்திரு வேலன்சுவாமி கருத்து வெளியிட்டுள்ளார்.