போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
ஆசிரியர்களாக பாடசாலைகளுக்கு இணைப்புச்செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாடசாலையில் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் த.அனிரன் தெரிவித்துள்ளார்.
தமது நியாயமான கோரிக்கையினை அரசாங்கம் ஏற்று தமக்கான தீர்வினை வழங்க முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று(28.10.2025 பிற்பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியாற்றிக் கொண்டு வருபவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி தொடர்பில் கடந்த ஐந்து வருடங்களாக பட்டதாரிகள் ஒன்றியம் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்களும், ஊடக சந்திப்புகளும் நடாத்தி வருகின்றோம்.

வுழங்கப்பட்டுள்ள நியமனம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். ஆனால் செயற்பாடுகள் ஆசிரியர்கள்,
இவர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குரிய சலுகைகளும் கிடைப்பதில்லை, ஆசிரியர் பணியினை ஆற்றுகின்ற போதும் ஆசிரியர்களுக்கான சலுகைகளும் இவர்களுக்கு இல்லை.
எனவே இரண்டுமே இல்லாத நிலையில் இவர்களது நியமனம் இருக்கின்றன. தற்போது கடந்த வாரம் எமது நாட்டின் பிரதமர் நாட்டிலே முப்பத்தாயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால் இந்த வெற்றிடங்கள் இருப்பதற்கான வெளிப்படுத்துகைகள் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்படவில்லை.
ஏனெனில் ஆசிரியர்களாகச் சேவை புரிகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான கணக்கெடுப்புகளை இவர்கள் பார்ப்பதில்லை.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் கூட நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை. காரணம் நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மறைமுகமாக நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கற்றல் கற்பித்தலில் இருந்து விலகி...
இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இருப்பு என்ன? இவர்கள் பாடசாலைகளில் இருந்து விடுபடுவார்களாக இருந்தார்

வலயங்களில் மாத்திரமல்லாமல் பாடசாலைகளிலும் எவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் என்பதை இனங்காட்டும் முகமாக நாங்கள் நேற்றைய தினத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் கல்குடா, மண்முனை மேற்கு, பட்டிருப்பு போன்ற கல்வி வலயங்களில் பல காலமாக ஆசிரியர்கள் இல்லாமல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களே அந்தப் பணிகளை முன்னெடுத்திருந்தார்கள்.
நேற்றும் இன்றும் எங்களுடைய பணி பகிஸ்கரிப்பு இடம்பெற்று வருவதால் பல பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
இதனை எமது பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் பாடசாலைகள், வலயங்கள், ஆசிரியர் அதிபர்ளுடனான பிரச்சனைகள் காரணமாக இதனை மேற்கொள்ளவில்லை. நாங்கள் எமது தொழிலுரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரு வழிமுறையாகவே இதனைக் கையாளுகின்றோம்.
ஒரு நிரந்தர ஆசிரியர்களுக்கு ஒரு பாடசாலையில் எவ்வாறான பணிகள், நேரசூசிகள் வழங்கப்படுகின்றதோ அதே விதமான விடயங்களே ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விடயங்களை விடுத்து அவர்கள் கற்றல் கற்பித்தலில் இருந்து விலகி அலுவலகத்தில் ஆவணக் கோவைகளைச் செய்யும் அலுவலர்களாகவே நேற்றும் இன்றும் தங்கள் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |