2026ஆம் ஆண்டின் இடமாற்றத்திற்கு எதிராக திரளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்ச்சியுற்றுள்ளதாக மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் களுவாஞ்சிகுடியில் ஒன்றுசேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக கடந்த 21வருடமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் யுத்த காலத்தில் கடமையாற்றி தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையில் இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றம் தமக்கு உளவியல், உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
எதிர்கொள்ளும் சிரமங்கள்
அதாவது திருகோணமலை சென்று வருவதாயின் தாம் பெறும் வேதனம் போக்குவரத்திற்கு மாத்திரம் போதுமானது எனவும் சொத்துக்கடன் மற்றும் ஏனைய கடன்களை பெற்றவர்கள் இதனால் மேலும் பாதிப்புள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையிலும் பராமரிப்பிலும் பாரிய தாக்கம் ஏற்பட்டும் எனவும் தெரிவித்தனர்.

இதுவிடயமாக இடமாற்றம் செய்த உயர் அதிகாரிகளை சந்தித்து தமது நிலையினை தெளிவு படுத்தி பொருத்தமான இடத்திற்கு இடமாற்றத்தினை செய்யக்கோருவது எனவும் மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் சுனில் கந்துநெத்தி ஆகியோரை சந்தித்து தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பாக முறையிடுவது எனவும் மேன்முறையீட்டு சபையின் முடிவுகய் தமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் சட்டரீதியாக நியாயம் கோருவது எனவும் மனித உரிமை ஆணைக்குழுவினை நாடுவது எனவும் கருத்துரைத்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ.சுமத்திரனை அணுகி சட்ட ஆலோசனை பெற்றதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் தமது நிலமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri