கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
அரச உத்தியோகத்தர்களின் நலன்களையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் இணைத்தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்தார்.
குறித்த போராட்டமானது நாளையதினம்(23.11.2026) நாடெங்கிலும் உள்ள அலுவலகங்களுக்கு முன்பாக முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறினார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(21.11.2026) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போராட்டம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், நாளையதினம் அனைத்து அரச அலுவலகங்கள் முன்பாக மதிய நேர இடைவேளையின் போது பொதுமக்களின் சேவைகளுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காத வண்ணம் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

அதே நேரத்தில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய அரச திணைக்களங்களில் கடமை புரிவோர், உத்தியோகத்தர்களின் நலன்களையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்குடன், மதிய நேரத்தில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை தங்களது திணைக்களங்களுக்கு முன்பாக ஒரு 15 நிமிடங்கள் மேற்கொள்ள உள்ளனர்.
அந்த வகையில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களைப் போன்று 16க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டன.
கோரிக்கை
எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் கவன ஈர்ப்பாக எமது ஒரு செய்தியை அரசுக்குச் சொல்வதற்காகவும், நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதைக் காட்டுவதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
எமது பலத்தை அரசுக்குக் காட்டுவதற்காகவும், அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவு ம்தான் இந்தப் போராட்டத்தை நியாயமான முறையில் செய்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் எமது போராட்டமானது 23 ஆம் திகதி இடம்பெற்ற பின்னர் அரசால் அது தொடர்பாகக் கவனத்தில் கொள்ளப்படாத விடத்து, எதிர்வரும் 30 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டமாக நாடு பூராகவும் இது பாரிய அளவில் இடம்பெற உள்ளது எனக் குறிப்பிட்டார்.