யாழில்நகர அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள கோரிக்கை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதாக கோரி கடற்கரையோரமாக உள்ள அரச நிலங்களை தமக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட செயலக அபிவிருத்தி குழுவில் அனுமதி கோரியுள்ளது.
குறித்த விடயம் யாழ்ப்பாண(Jaffna) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது நகர அவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் குறித்த திட்டத்துக்காக காணிகளை விடுவிப்பது தொடர்பில் அனுமதி கேட்டு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய என ஊர்காவற்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பருத்தித் தீவில் 10 ஏக்கர் அரச காணியும் அதே பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரம்பன் பகுதியில் 1.5 ஏக்கர் காணியும் வலி வடக்கு காங்கேசன் துறை பகுதியில் 10.7 ஏக்கர் அரச காணிகளை தமக்கு வழங்குமாறு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.
செல்வராஜா கஜேந்திரன்
குறித்த மூன்று பகுதிகளிலும் இடம்பெறும் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் விளக்கப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பகுதிகளில் முதலீடு செய்பவர்கள் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வழங்கப்படவில்லை.
இதன் போது கருத்தை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah Kajendren),
''அபிவிருத்தி என்ற போர்வையில் எமது நிலங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்குவது ஏற்கக் கூடிய விடயம் அல்ல. அது மட்டுமல்லாது குறித்த பகுதிகளில் முதலீடு செய்பவர்கள் யார் என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது சில வேளைகளில் முதலீட்டாளர்களின் நோக்கம் பிழையாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி குழுவில் காணி வழங்குவதற்கு அனுமதி தந்த பின்னர் நிறுத்த முடியுமா" என கேள்வி எழுப்பினார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan),
''அபிவிருத்தி திட்டங்கள் தயாரிக்கப்படும் போது தெளிவான ஒரு விளக்கத்தை எமக்கு தெரிவிக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்ன முதலீடு செய்யப் போகிறார்கள் யார் இலங்கையைச் சேர்ந்தவர்களால் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களா காலப்பகுதி என்ன என ஒன்றுமே தெரியாது எவ்வாறு அனுமதி வழங்குவது" என கேள்வி எழுப்பினார்.
பி எஸ் எம் சாள்ஸ் பதில்
இதன்போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட அதிகாரி குறித்த திட்டங்களுக்காக முதலீட்டாளர்களின் விண்ணப்பம் கோரப்பட்டடே உள்ளீர்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டினார்.
இதுதான் போது கருத்துதெரிவித்த வடமாகண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ்(P. S. M. Charles), ''குறித்த பகுதிகளில் என்ன அபிவிருத்தி செய்யலாம் என ஒரு விடயத்தை மட்டும் கூறாமல் இரண்டு மூன்று விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கப்படத்துடன் தமிழ் மொழிபெயர்ப்புடன் வழங்குங்கள்" என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda),
''பிறிதொரு திகதியில் குறித்தபடி அந்த தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட பின்னர் தீர்மானம் எடுக்க முடியும்." என சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |