வளரும் நாடுகளின் வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரித்தானியா! இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
ஐக்கிய இராச்சியம், வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தக திட்டத்தை (DCTS) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் இன்று (19.06.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட 65 நாடுகள்
பிரித்தானியா நடைமுறைப்படுத்தியுள்ள வளரும் நாடுகளின் வர்த்தக திட்டத்தின் மூலம், இலங்கை உட்பட 65 நாடுகளுக்கு முன்னுரிமை வர்த்தக நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் உலகளவில் மிகவும் தாராளமான வர்த்தக திட்டங்களில் ஒன்றை உருவாக்குவதுடன் கட்டணக் குறைப்புக்கள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வர்த்தக விதிமுறைகளை வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வர்த்தக ஏற்றுமதி சந்தை
இதேவேளை இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக ஏற்றுமதி சந்தையாக பிரித்தானியா இருப்பதாகவும் இந்த உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள பொருட்களை இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுங்கவரியின்றி வர்த்தகம் செய்ய அனுமதி
The UK is implementing the Developing Countries Trading Scheme (DCTS) from today. It allows Sri Lanka to trade with the UK tariff-free on 92 percent of goods, leading to increased competitiveness of Sri Lankan products in the UK market - British High Commission-
— M U M Ali Sabry (@alisabrypc) June 19, 2023
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டர் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,“பிரித்தானியா இன்று முதல் வளரும் நாடுகளின் வர்த்தக திட்டத்தை (DCTS) நடைமுறைப்படுத்துகின்றது.
இதன்மூலம் 92 சதவீத பொருட்களுக்கு சுங்கவரியின்றி வர்த்தகம் செய்ய இலங்கையை அனுமதிக்கிறது, இது பிரித்தானிய சந்தையில் இலங்கை தயாரிப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |