கொழும்பு புறநகர் பகுதியொன்றில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு
கஹதுடுவ − ஜயலியகம பகுதியில் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக்க பத்மராஜ தெரிவிக்கின்றார்.
47 வயதான குறித்த நபர், கொழும்பு − கொம்பனிதெரு பகுதியிலுள்ள பிரதான நிர்மானத்துறை அலுவலகமொன்றில் பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், பொலன்னறுவை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நபரின் மனைவி, மகன் உள்ளிட்ட 50 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
குறித்த நபர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து, இந்த வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
