விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விபரம் வெளியானது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட, 93 கைதிகள், பொசன் பெளர்ணமி தினத்தையொட்டி, விடுதலை செய்துள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரமும் வெளிவந்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடராஜா சரவணபவன், புருஷோத்தமன் அரவிந்தன், இராசபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், நளன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன், சிவப்பிரகாசன் சிவசீலன்,
மயில்வாகனம் மாடன், சூர்யகுமார் ஜெயச்சந்திரன்
மன்னார் மாவட்டம் சைமன் சந்தியாகு, ராகவன் சுரேஸ், சிறில் இராசமணி,எம்.எம். அப்துல் சலீம், சந்தன் ஸ்ராலின் ரமேஸ்,கபிரியேல் எட்வேட் யூலியன் மாத்தளை மாவட்டம் விஸ்வநாதன் ரமேஸ் ஆகியோர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
