இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் விபரம்
இலங்கையில் மேலும் 650 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,610 பேர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 203,007 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,670 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,045 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri