ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை தொடர்பில் விரைவில் விரிவான அறிக்கை!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்த 16 அகவை சிறுமியின் மரணம் குறித்து இரண்டாவது பிரேத பரிசோதனை செய்த 3 பேர் கொண்ட குழு, ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேராதனை மருத்துவமனையில் இன்று ஒன்பது மணிநேரம், சிறுமியின் உடலத்தில் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை உடலம், பேராதனை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட உள்ளது .
இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொண்ட குழுவில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஜீன் பெரேரா, மருத்துவ பீடத்தின் தடயவியல் துறைத் தலைவர் - சமீர குணவர்தனா மற்றும் பேராதனை போதனா மருத்துவமனையின் பிரபாத் சேனசிங்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
