கிளிநொச்சியில் பெரும்போக பயிர்செய்கையின் அழிவு குறித்து வெளியான தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக பயிர்செய்கையில் வறட்சி, வெள்ளம், நோய் தாக்கம் காரணமாக 2725.74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார்.
குறித்த மாவட்டத்தில் பெரும்போக பயிர்செய்கையில் பாதிப்புக்கள் தொடர்பில் வினவியபோதே ப.தேவரதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணை மடுக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறிய நடுத்தர குளங்கள் மானாவாரி செய்கை நிலங்கள் உள்ளடங்களாக 66,339.13 ஏக்கர் நிலப்பரப்பில் 2022/2023 இல் பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவடைந்து வருகின்றன.
நோய் தாக்கம்
இந்த நெற் செய்கைகளில் வெள்ளம், வறட்சி, நோய் தாக்கம் மற்றும் காட்டு யானை உள்ளிட்ட மிருகங்கள் என்பவற்றால் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களத்தினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள உள்ள 10 கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2176.34 ஏக்கர் நெற்செய்கை மாவட்டத்தில் நிலவிய வளர்ச்சி காரணமாக அழிவடைந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து அண்மையில், பெய்த மழை, வெள்ளம் காரணமாக 342.40 ஏக்கர் செய்கைகள் அழிவடைந்துள்ளன.
இதனைவிட நோய்த்தாக்கம் காரணமாகப் பூநகரி பிரதேசத்தில் 141.75 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளன.
மேலும், காட்டு யானை மற்றும் விலங்குகளின் தாக்கத்தினால் 65.25 ஏக்கர் பயிர்ச்செய்கையும் அழிந்துள்ளது.
இவ்வாறு இம்முறை மேற்கொள்ளப்பட்ட 2022 /2023 பெரும்போகச் செய்கையின்போது
வறட்சி வெள்ளம் நோய் தாக்கம் விலங்குகள் என்பவற்றால் சுமார் 2725.74 ஏக்கர்
வரையான நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், இதனால் 1,106 விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி திணைக்களத்தின் புள்ளி விவரத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
