வவுனியாவில் 1808 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தால் அழிவு
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 1808 ஏக்கர் நெற் ஷபயிர் செய்கையும், 1081 ஏக்கர் உழுந்து பயிர் செய்கையும் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் 97 குளங்களின் கீழே செய்கை பண்ணப்பட்டிருந்த 1808 ஏக்கர் நெர்பயிர்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், 1081 ஏக்கர் உழுந்து பயிர்செய்கையும் அழிவடைந்துள்ளது.
இதேவேளை குறித்த பயிர்களுக்கான காப்புறுதியை செய்திருப்பவர்களிற்கு அதற்கான காப்புறுதி தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வவுனியாவில் அனைத்து குளங்களும் வான் பாய்ந்து வருகின்ற நிலையில் கனமழை நீடிக்கும் பட்சத்தில் மேலும் பயிர்கள் அழிவடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam