யாழ்.பல்கலைக்கழகத்தில் இனவெறியினரின் இழிசெயல்! தமிழக துணை முதல்வர் வேதனை
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டமைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூண் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடித்து தகர்த்தப்பட்டுள்ளது.
ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்துவம் இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது, என்பதுடன் இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. pic.twitter.com/Mq6TI8XSA6
— O Panneerselvam (@OfficeOfOPS) January 9, 2021
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam