தொழிற்சங்கங்களை புற்றுநோய்க்கு ஒப்பிட்ட பொலிஸ் மா அதிபர்
தொழிற்சங்கங்களை புற்றுநோய்க்கு ஒப்பிட்டு, அவை நிறுவன ஒருமைப்பாட்டின் சிதைவுக்கு பங்களிப்பதாக இலங்கையின் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu) குற்றம் சுமத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகளின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கான அறிவையும் மனப்பான்மையையும் வளர்ப்பதற்கான இரண்டு நாள் செயலமர்வில் பொலிஸ்மா அதிபர் உரையாற்றினார்.
குற்றவாளியின் பெயர்
இதன்போது மரணமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் பெயர் அடங்கிய பதாகையை காட்சிப்படுத்திய சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் கருத்துரைத்தார்.
குற்றக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் குறித்து எச்சரித்த அவர், இது போன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.
இந்தநிலையில் சுவரொட்டிகள் போன்ற ஆத்திரமூட்டும் வழிகளில் கருத்துக்கள் வெளியிடப்படுவதையும் அவர் குறித்த நிகழ்வின்போது கண்டித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
