தேசபந்து தென்னகோனின் விசாரணை அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்தக் குழுவின் அறிக்கை, அடுத்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படவுள்ளது.
அறிக்கை ஒன்று நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குப் பின்னர் அது ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த அறிக்கை ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படவுள்ளது.
தென்னக்கோனின் அறிக்கை
இந்தநிலையில் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடைமுறையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அண்மையில் கோடிட்டுக் காட்டினார்.
முன்னதாக, தென்னக்கோனின் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தென்னகோனை குற்றவாளி என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
அதன்படி, விசாரணை அறிக்கை மீதான விவாதம் 2025 ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
