தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு

Anura Kumara Dissanayaka Deshabandu Tennakoon National People's Power - NPP
By Shadhu Shanker Mar 19, 2025 02:42 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தேசபந்து தென்னக்கோன்(Deshabandu Tennakoon) கைது செய்யப்படவில்லை அவர் தான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் இதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிகளை பிடிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் 75 ஆண்டுகால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் மீது சேறு பூசுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

அரசியல் சாபம்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

“ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு கையெழுத்தின் ஊடாக அரிசி மாபியாக்களை முடிவுக்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்து நாளையுடன் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால் ஏதும் செய்யவில்லை.

தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு | Deshabandhu Thennakoon Was Arrested

75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்தீர்கள். ஊழல் மோசடி தொடர்பான கோப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஆட்சிக்கு வந்ததன் பின்னரும் 75 ஆண்டுகால அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

வெட்கப்பட வேண்டும். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நீங்கள் பிடிக்கவில்லை. அவர் தான் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ஆளும் தரப்பின் பின் வரிசை உறுப்பினர்கள் அரசாங்கத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

நாங்களும் எமது அரசாங்கத்தில் தலைவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். ஆனால் அது பொய் என்பதை பின்னர் தெரிந்துக் கொண்டோம். ஆளும் தரப்பில் முன்வரிசையில் ' டை கோட்' அணிந்திருப்பவர்கள் ஊழலுக்கு துறைபோனவர்கள். நாங்கள் கூறுவதை ஆளும் தரப்பின் பின் வரிசை உறுப்பினர்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள்.

தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்ற மகன் கைது

தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்ற மகன் கைது

ஊழல் மோசடிகள்

கடந்த காலங்களில் அநுரகுமார திசாநாயக்க, பிமல் ரத்நாயக்க மற்றும் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஊழல் மோசடிகள் பற்றி பேசுவார்கள்.

தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு | Deshabandhu Thennakoon Was Arrested

பின்னர் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் ஊழல்வாதி என்று குற்றஞ்சாட்டிய நபருடன் அமர்ந்து மதிய உணவை உட்கொள்வார்கள். இதுதான் உண்மை. இந்த விடயம் தொடர்பில் ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளைப்பூண்டு மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி உட்பட பல மோசடிகளை பற்றி பேசினீர்கள், ஆட்சிக்கு வந்து ஓரிரு வாரத்துக்குள் ஊழல்வாதிகளை தண்டிப்பதாகவும் குறிப்பிட்டீர்கள்.

ஆனால் இன்று எதிர்க்கட்சிகள் மீது சேறுபூசிக் கொண்டிருக்கீன்றீர்கள். ரணிலை பற்றி அரசாங்கம் நன்கு அறியும், அரசாங்கத்தை பற்றி ரணிலும் நன்கு அறிவார். எதிர்வரும் காலங்களில் மக்கள் மத்தியில் அரசாங்கத்தால் செல்ல முடியாத நிலை ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.  

சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய CID அதிகாரி தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு என்ன..!

சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய CID அதிகாரி தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு என்ன..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US