தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை.. அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள்
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நேற்று (05) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள் பெறப்பட்டன.
அதேவேளை, பிரேரணைக்கு எதிராக எந்த வாக்குகளும் பெறப்படவில்லை.
ஜனாதிபதி அநுர..
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தார்.
அதன்படி, 2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் படி, தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதாவது, வருகை தராத உறுப்பினர்கள் உட்பட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




