தேரரை போல் வேடமிட்டிருக்கும் தேசபந்து! ராஜபக்சவின் பாதுகாப்பில் உள்ளாரா என்றும் சந்தேகம்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோரை பொலிஸார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக செல்லவில்லை என்பது மட்டுமே உறுதியான விடயம்.
இந்த நிலையில் மற்ற இருவரை விடவும் தேசபந்துவை கண்டுப்பிடிக்காமல் இருப்பது பொலிஸாரின் மிகப்பெரிய தோல்வியென்று இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பஸீர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பிரசன்ன ரணவீர மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் ராஜபக்சர்களின் பாதுகாப்பில் இருக்கலாம் என்று கூறிவிட முடியாது.
தேரரை போல் வேடமிட்டு ஒரு விகாரையில் தேசபந்து தென்னக்கோன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின என்றார். இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |