குற்றம் இழைத்தவர்கள் உள்ளே செல்ல ஆயத்தமாகுங்கள்
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறைக்குச் சென்று சிறையில் அவர்கள் கவிதை புத்தகம் எழுதலாம் எனவும் சிறையில் சுவர்களில் ஓவியங்களை தீட்டலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை போன்று குற்றம் இழைத்தவர்களுக்கு எவ்வித நிகழ்வு தன்மையும் காட்டப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றம் இழைத்த தரப்பினர் தற்பொழுது பதற்றம் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றவாளிகளுக்கு தற்பொழுது வியர்ப்பதனை தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை குற்றவாளிகளினால் அரசாங்கத்தை பிடிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான முறையில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே குற்றவாளிகள் நாள்தோறும் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தாமலேயே குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறு மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிக்க இடமளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுடன் இணைந்து நாடு எதிர் நோக்கும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயார் எனவும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்ற பேதமின்றி இணைந்து செயல்பட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகள் போன்று எதிர்காலத்திலும் நெருக்கடி நிலைமைகளுக்கு முகம் கொடுத்து அவற்றை முகாமைத்துவம் செய்ய முடியும் என பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri