பெருந்தோட்ட பிரதி அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும், இன்று (09) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
பனை சார் உற்பத்தி பொருட்கள்
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

குறித்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திராவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பனை சார் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு அமைச்சரினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் 'கற்பகம்' என்ற பெயரில் பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் பெறுமதி வாய்ந்த பனை உற்பத்தி பொருட்களுக்கான உபகரணங்களும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குகதாசன், திருகோணமலை நகர பிரதேச செயலாளர் க. மணிவண்ணன் மற்றும் பிரதி அமைச்சர்களின் செயலாளர்கள், பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri