மனோ கணேசன் அரசாங்கத்திடம் எழுப்பியுள்ள கேள்வி
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் போதைப் பொருள் விநியோகம் செய்து பிரசாரம் செய்ததாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுமத்திய குற்றச்சாட்டு குறித்து அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது சில தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுக்கு போதைப் பொருள் விநியோகம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியானது மட்டுமன்றி பாரதூரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தகவல்கள் இருந்தால் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு உடன் அறிவிக்குமாறு கோரியுள்ளார்.
தேர்தல் காலத்தில் இவ்வாறான முறைப்பாடுகள் குறித்து ஏன் தகவல்கள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டே தொகுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சில எதிர்க்கட்சி தரப்பினர் போதைப் பொருட்களை விநியோகம் செய்தனர் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam