சிறைக்கு செல்லும் நாமல் -சஜித் : திடுக்கிடும் தகவலை வெளிட்ட ஆளும் தரப்பு அமைச்சர்
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு எதிர்க்கட்சியில் பெரும் அரசியல் புள்ளிகள் இன்றில்லை. சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச போன்றோர் அரசியல் தலைவர்கள் அல்ல.பெரும் குற்றவாளிகளாக சிறைக்கு செல்ல இருப்பவர்கள் என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு
தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்று நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்கன் டொலர் இருக்கிறது.
நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது 3 பில்லியன் அமெரிக்கன் டொலர் கூட இருக்கவில்லை. இன்று பொருளாதார வளர்ச்சி 8.3ஐ நாம் அடைந்திருக்கிறோம்.
ஐஎம்எப் உடன் செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை கடந்த அரசாங்கம் ஏற்படுத்திருந்ததாலே, நாம் தொடர்ந்து அவர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.
மேலும், மக்களுக்கு முடியுமான நிவாரணங்களை வழங்கி அரசாங்கத்தின் அதீத செலவுகளை குறைத்து ஒரு சாதாரண தன்மையை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
