கிழக்கில் துணை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை அமைக்க தமிழரசுக் கட்சி கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் துணை இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு, இந்திய உயர்ஸ்தானிகரிடம் இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய
உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
விசேட சந்திப்பு
இதில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகர சபை முதல்வர், இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் வருகை தர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம்
அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் இவர் கிழக்கு மாகாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
