கஜேந்திரகுமார் பொய்யுரைப்பதாகப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் குற்றச்சாட்டு
இராணுவப் படையினரின் எண்ணிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய தகவல்கள் பொய்யானவை எனப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போது நாட்டில் 130,000 இராணுவப் படையினர் மட்டுமே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவது போன்று படைவீரர்களின் எண்ணிக்கை 250,000 கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"தரவுகளைச் சரிபார்க்காது, எங்கோ ஒரு சந்தியில் தகவல்களைப் பெற்றுக்கொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்; அப்படிப் பொய் சொல்ல வேண்டாம்," என கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பார்த்து அவர் தமிழ் மொழியில் குறிப்பிட்டார்.
மேலும், இராணுவப் படையினர் தொடர்பில் அரசாங்கம் எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், படைவீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாகக் (100,000) குறைப்பதற்கும், ஏனைய படையினரை வேறு சேவைகளில் ஈடுபடுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.