பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் இன்று(17) உத்தரவிட்டார்.
நாவற்சோலை- கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த தனிமையிலிருந்த இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்தியதாகத் தெரிவித்து குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டார்.
பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri