நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் தடுப்புக்காவலிலா...! பிரித்தானியா விளக்கம்
100இற்கும் மேற்பட்ட இலங்கையின் புலம்பெயர்ந்தோரை விமானம் மூலம் இலங்கைக்கு சொந்த விருப்பத்தின் பேரில் திரும்பி செல்வதற்கு பிரித்தானியா அரசாங்கம் இதுவரை உதவியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் நிலை?
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் திருப்பியனுப்பபட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின் புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அவர்கள் தங்கள் நாட்டிற்குதிரும்பும் போது எவ்வித துன்புறுத்துலுக்கும் உள்ளாகாமலும் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இங்கிலாந்து அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் கூறியுள்ளார்.
குந்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதி
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை, இராணுவத்தளம் அமைப்பதற்காக அமெரிக்காவிற்கு இங்கிலாந்து குந்தகைக்கு வழங்கியுள்ளது.
அங்கு புகலிடம் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் பல மாதங்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாம்களில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.