கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஜிமி சாந்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
கனடாவிலிருந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் தாய்லாந்தின் ஃபூகெட்டின் ராவாய் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ,32 வயதான ஜிமி “ஸ்லைஸ்” சந்து, வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் காரில் இருந்து இறங்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சந்து, தாய்லாந்தின் சமீபத்திய தீவின் தெற்கு முனையில் உள்ள கடற்கரை ரிசார்ட் வளாகத்தில் உள்ள வில்லாவின் உரிமையாளரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து சாலோங் பொலிஸார் ஊடகங்களுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.
இறந்த கனேடியரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தன. அவர் ‘மன்தீப் சிங்’ மற்றும் ‘அமர்ஜித் சிங் சிந்து’ ஆகியோருக்கான அடையாளத்தை வைத்திருந்தார். ஆனால், தாக்குதலில் பலியானது ஜிமி சாந்துதான் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் சென்னையில் பிறந்த சந்து, 7 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உறவினர்களுடன் வளர்ந்தார். அங்கு பல்வேறு குற்றக்கும்பல்களுடன் இணைந்து செயற்பட்ட அவருக்கு பல கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதன்பின்னர் ஜனவரி 2014 இல் அபோட்ஸ்போர்டில் தமது போட்டிக்கும்பலான ரெட் ஸ்கார்பியன் குழுவின் தலைவரான மாட் கேம்ப்பெல்லைக் கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு வருடம் கழித்து தண்டனை நீக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு குடியேற்ற விசாரணையைத் தொடர்ந்து, 2016 இல் சந்து கனடாவில் இருந்து அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டில், கெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கும் சட்டவிரோத தொழிற்சாலையை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானார்.
தொடர்ந்து ,தலைமறைவாகி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அவர் இரகசியமாக வாழ்ந்து வருகிறார். அதேவேளை அவரது வலது கன்னத்தில் பெரிய தழும்பு இருந்ததால் அவரை செல்லமாக ‘ஸ்லைஸ்’ எ அழைக்கின்றனர்.
கடந்த ஆண்டு வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு குற்றக் கும்பல் உறுப்பினரான கர்மன் கிரேவாலுடன் அவர் “நெருக்கமானவர்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஃபூகெட்டின் தெற்கே உள்ள கடலோர ரிசார்ட் நகரமான ரவாய்யில் உள்ள தி பீச் ஃபிரண்ட் ஹோட்டல் ஃபூகெட்டில் இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் புதர்களில் இருந்து வெளியேறி, அவரை சுட்டுக் கொன்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம், கனடாவில் அந்த நபரின் கடந்தகால நடவடிக்கைகளின் அடிப்படையில் இது ஒரு தொழில்முறை ‘கொலை’ எனத் தோன்றினாலும், இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குற்றத்தில் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றதாகவும், சம்பவத்தில் பலியானவர் 32 வயதான மன்தீப் சிங் (ஜிமி சந்து மற்றும் அமர்ஜித் சிங் சிந்து) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் இந்தியாவில் பிறந்திருந்தபோதும் , அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.