சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 115 பேரை நாடுகடத்த, 24 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு முறை நாடுகடத்துவதற்குமான செலவு 13,000 சுவிஸ் ஃப்ராங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் விமர்சனம்
அரசியல்வாதிகள் பலர், இப்படி புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதற்காக பெரும் தொகை செலவு செய்யப்படுவதை விமர்சித்துவருகிறார்கள்.
ஆனால், புலம்பெயர்தல் செயலகமோ, அந்த செலவு நியாயமானதுதான் என்றும், புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறித்தான் ஆகவேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |