இலங்கையில் தரமற்ற மருந்துகளின் பாவனை : விசேட விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையில் தரமற்ற மருந்துகளை பயன்படுத்தியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முந்தைய விசாரணைகளில் தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளின் பயன்பாடு குறித்த குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளிக்கொணரப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சிறப்பு விசாரணை
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரமற்ற போதைப்பொருள் பயன்பாடு குறித்த முறைப்பாடுகள், இந்த சிறப்பு விசாரணையை ஆரம்பிக்க வழியேற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் மருந்துகள் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான கணினி அமைப்பு பற்றிய தனி விசாரணை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இது தொடர்பான அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கணக்காய்வாளர் நாயகம் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
