புகையிரத திணைக்கள காணிகளில் அமைத்த சட்டவிரோத வேலியை அகற்றிய திணைக்களத்தினர்(Photos)
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் சில நபர்கள் வேலி அமைத்த நிலையில் புகையிரத திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் மஜ்மாநகர் பிரதேசத்தில் உள்ள புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் இவ்வாறு சட்டவிரோதமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.
புகையிரத பாதுகாப்பு சேவை உதவி அத்தியட்சகர் ஆர்.பி.ஏ.ரத்னமலலவின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட புகையிரத பொறியியலாளர் ஆர்.ஜே.அலெக்சாண்டரின் அனுசரணையோடு வருதை தந்த பொலிஸார் மற்றும் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து புகையிரத காணிக்குள் அமைக்கப்பட்ட வேலியை அகற்றியுள்ளனர்.
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் பதினைந்து நபர்கள் சட்டவிரோதமான
முறையில் வேலி அமைந்த நிலையில், வேலி அகற்றப்பட்டுக் குறித்த நபர்களைக்
காணிக்குள் வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார்
கூறியுள்ளனர்.







