தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையை அறிவித்த அஞ்சல்துறை
இலங்கையின் அஞ்சல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தலுக்கான, தமது மொத்த செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
அஞ்சல் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளதால், தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதாக, அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார (P. Sathkumara ) தெரிவித்துள்ளார்.
பணியாளர்களுக்கு வெற்றிடங்கள்
அத்துடன், தமது திணைக்களம் குறிப்பிடத்தக்க பணியாளர் வெற்றிடங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேர்தல் தொடர்பான பணிகளை திறம்பட நிறைவேற்ற 1,000 முதல் 2,000 அஞ்சல் பணியாளர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்
பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற அஞ்சல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு தேசிய தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |