மட்டக்களப்பு சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கை
மட்டக்களப்பில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக முதலீட்டாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (16.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவட்டத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்து உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறித்து ஆராயப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றை அமைதல் மற்றும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள வெளிச்ச கோபுரத்தை புனரமைப்பு செய்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் பி.மதனவாசன், 243 ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்கே, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி சிவலிங்கம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார் மற்றும் துறைசார் நிபுனர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.