அடுத்து வரும் 36 மணிநேரத்திற்கு வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்து வரும் 36 மணி நேரத்திற்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) மாலை இந்த அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்து
மத்திய மலைநாட்டின் சில பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மழையுடன் வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam