அரசாங்கம் பாரியளவு தொகை வரி வருமானத்தை இழந்துள்ளது: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அரசாங்கம் பாரியளவு தொகை வரி வருமானத்தை இழந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டபிள்யூ.சீ.பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் நாட்டுக்கு 100 பில்லியன் ரூபா வரையிலான வருமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்கள் அரச வருமான இழப்பில் தாக்கத்தை செலுத்தியது.
பெரு நிறுவனங்கள் மீது வரி அறவீடு செய்யும் அரசாங்கத்தின் யோசனைத் திட்டங்களினால் நுகர்வோர் பாதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.