குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட அலுவலக பிரிவு: வெளியான அறிவிப்பு- செய்திகளின் தொகுப்பு
வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட அலுவலக பிரிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதியஅலுவலக பிரிவு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,