ஆளுநரின் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
வவுனியா பல்கலைக்கழகத்தில் வட மாகாண ஆளுநருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சமூகம் மற்றும் வவுனியா கல்வியியலாளர் சமூகத்துடன் வட மாகாண ஆளுநர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், கூட்டம் இடம்பெற்ற வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்ற போதிலும் அங்கிருந்த காவலர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்தினுள் செல்லஅனுமதிக்கவில்லை.
எனினும் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஆளுநரை ஊடகவியலாளர்கள் அணுகி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்ட போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் துணைவேந்தரிடம் கேட்குமாறும் தெரிவித்துச் சென்றிருந்தார்.
இந்நிலையில் ஊடகவியலாளர்களைக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்குள் செல்ல ஆளுநரைக்
காரணம் காட்டி பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தடையை
ஏற்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.