டெங்கு நோயாளிகளுக்கு, சிக்கன்குனியா சிகிச்சை தவறாக வழங்கப்பட்டால் உயிருக்கு ஆபத்தானது- சுகாதார அதிகாரிகள்
மழைக்காலம், நுளம்புகளின் இனப்பெருக்கத்தை தீவிரப்படுத்துவதால், சிக்கன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் என்பவற்றின் பரவல் அதிகரித்து வருவது குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு நோய்களும் ஒரே நுளம்புகளால் பரவுவதால், பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுகாதார அதிகாரிகள்
பலத்த மழை காரணமாக நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, நாடு முழுவதும் இரண்டு வைரஸ்களும் விரைவாக பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், டெங்கு நோயாளிகளுக்கு, சிக்குன்குனியா சிகிச்சை தவறாக வழங்கப்பட்டால் உயிருக்கு ஆபத்தானது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் தொடர்புடைய அறிகுறிகளை கொண்டவர்களுக்கு, சரியான மருத்துவ நோயறிதலின் முக்கியத்துவத்தையும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான சிகிச்சையை உறுதி செய்வதற்காக, சுய மருத்துவம் செய்வதற்குப் பதிலாக உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்கள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்.