யாழில் அதிகரித்துள்ள டெங்கு அபாயம்! (Video)

Jaffna Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Theepan Jul 04, 2023 06:38 AM GMT
Report

யாழ்.மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் இன்று (04.07.2023) நடைப்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள். இதுவரையில் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு தாக்கத்தினால் இறப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்.

யாழில் அதிகரித்துள்ள டெங்கு அபாயம்! (Video) | Dengue Risk Has Increased In Jaffna

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு  

இது தவிர வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 1491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக 1843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள்.


அத்துடன் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாகாணங்களை ஒப்பிடுகையில் யாழ்.மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது யாழ்.நகர பகுதியான நல்லூர் - கரவெட்டி பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுவதுடன் இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

டெங்கு  ஒழிப்பு செயற்றிட்டம்

இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

ஏனைய நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

யாழில் அதிகரித்துள்ள டெங்கு அபாயம்! (Video) | Dengue Risk Has Increased In Jaffna

டெங்கு தொற்றை குறைப்பதற்கு குறிப்பாக டெங்கு பரப்பும் நுளம்புகளை இல்லாது ஒழிக்க வேண்டும்.

அந்த நுளம்புகள் குறிப்பாக பல்வேறு இடங்களில் பெருகி அவை டெங்கு நோயை பரப்புவதனால் டெங்கு நோய் தாக்கமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் ஏற்படுகின்றது.

எனவே டெங்கு தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மருந்து தட்டுப்பாடு

இதேவேளை  வடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும்  இதனால் நோயாளிகள் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சுகாதார அமைச்சின் மருந்து பிரிவுக்கு பொறுப்பானவர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை அனுப்பி கொண்டிருக்கின்றார்கள்.

அத்தோடு சில மருந்துகளுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்படுகின்றபடியால் பொதுமக்கள் அந்த மருந்தை மருந்தகங்களில் வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது'' என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US